Saturday, September 6, 2008

பற்றாக்குறை

இன்னொரு இன்றில்
இறுகப் பிணைந்திருந்த‌
இரண்டு பேர்
இன்னமும் முடித்தபாடில்லை தம் கூடலை

தராத முத்தங்கள் தரப்பட்டு
அணுக நேரமற்ற அங்கலாவண்யங்கள்
ஆசை பொங்க ஆரத் தழுவி
வருடப்பட்டுக்கொண்டிருக்கின்றன‌
முன் ஜென்ம தேகங்களும் முயங்கலாகும்

அன்பின் மிகுதியில்
இருப்பின் அவசங்களும் அவசரங்களும்
இல்லாது போக
விருப்பின் உக்கிரம் வளர்பிறையாக
செல்ல விளிகள் மெல்ல மெல்ல வெளிக்கிளம்பி
நல்கிய வலி நிவாரணத்தில் கலிதீர நலம் பெறும் மனதின்
ஒறைப் பிரார்த்தனையாய் நீளும்
முற்றுப்பெறாது
காரிருளும் கலந்துறவாடலும்

பேரரசன்

கடவுளே சின்னஞ்சிறு சிமிழுக்குள்
கட்டுண்டு கிடந்தாலும்
எல்லையற்ற பெருவெளியின்
அரசனாக எண்ணுவேன் நான்...

Monday, August 25, 2008

பரந்து கிடக்கிறது நீர் வெளி
தொலைவில் கேட்கிறது
தனித்தலைபவனின் தாபக்குரல்
எப்போதேனும் என்னை உங்களுக்கு நினைவு வரலாம்
அப்போது நான் இல்லாமல் போகக் குஉடும்

என்னவென்று சொல்வதம்மா வஞ்சி இவள் பேரழகை...

வந்துட்டம்ல...

நானுங் குதிச்சிட்டேன் வலையுலகத்துல. வாள் வாள்னு வாள்த்துங்கய்யோவ்....