இன்னொரு இன்றில்
இறுகப் பிணைந்திருந்த
இரண்டு பேர்
இன்னமும் முடித்தபாடில்லை தம் கூடலை
தராத முத்தங்கள் தரப்பட்டு
அணுக நேரமற்ற அங்கலாவண்யங்கள்
ஆசை பொங்க ஆரத் தழுவி
வருடப்பட்டுக்கொண்டிருக்கின்றன
முன் ஜென்ம தேகங்களும் முயங்கலாகும்
அன்பின் மிகுதியில்
இருப்பின் அவசங்களும் அவசரங்களும்
இல்லாது போக
விருப்பின் உக்கிரம் வளர்பிறையாக
செல்ல விளிகள் மெல்ல மெல்ல வெளிக்கிளம்பி
நல்கிய வலி நிவாரணத்தில் கலிதீர நலம் பெறும் மனதின்
ஒறைப் பிரார்த்தனையாய் நீளும்
முற்றுப்பெறாது
காரிருளும் கலந்துறவாடலும்
Saturday, September 6, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
பற்றாக்குறையா? அதெல்லாம் இருப்பது போல தெரியலையே?... பின் நவீனத்துவ கவிஞர்கள் போல இருக்கு.... வாழ்த்துக்கள்!
நன்றி தமிழ்ப்பிரியன். உங்களுக்குத் தனிமடலாக (நீளமா) எழுதுகிறேன்.
Post a Comment